Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
தந்தை வழியில் சிபிராஜ்
 
.
Sunday, 05 April, 2009 10:42 AM
.
 பிரசன்னா நாயகனாக நடிக்க சிபிராஜ் வில்லனாக நடிக்கும் படம் ‘நாணயம்’. சஸ்பென்ஸ் திரில்லராக தயாராக உள்ள படம் இது. கேபிடல் சினிமா பிலிம் ஒர்க்ஸ் படத்தை தயாரிக்கிறது. ஒரு வங்கியில் நடைபெறும் கொள்ளையையும், அதற்கு முன்பாக நடைபெறும் சம்பவங்களையும் படம் விவரிக்கிறது. நாசர், மிஷ்கின், வெங்கட்பிரபு ஆகியோரோடு பணியாற்றிய அனுபவம் மிக்க
.
சக்தி எஸ்.ராஜன் படத்தை இயக்குகிறார். ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நெகடிவ் இமேஜ் பெற்ற பிரசன்னாவை நாயகனாகவும், சிபிராஜ் வில்லனாகவும் நடிக்க வைக்கும் வித்தியாசமான யுக்தியை இந்த படத்தில் அவர் பின்பற்றுகிறார். சிபிராஜ் தனது தந்தை சத்யராஜின் பாணியில் இந்தப் படத்தில் வில்லனாக வருகிறார்.

நாயகனாக நடித்து வரும் அவர், கதையை கேட்டதுமே இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டு விட்டாராம். சண்டை, தீ படங்களில் நடித்த ராகினி நாயகியாக நடிக்கிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். எஸ்.பி.சரண் தயாரிக்கும் இந்தப் படத்தில் யாஸ்மின், எஸ்.பி.டி. உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
| |

மற்றவை :