இந்தியில் பெரும் வெற்றி பெற்ற ராம் கோபால் வர்மாவின் திகில் படமான ‘புங்க்’ பொம்மாயி எனும் பெயரில் தமிழுக்கு வருகிறது. சுதீப், அம்ருதா, கான்வில்கர், அக்சாஸ் சானா மற்றும்கென்னிதேசாய் ஆகியோர் நடிக்கின்றனர். |
இது ஒரு நாத்தீகனின் நம்பிக்கையை ஆட்டி வைக்கும் கதை.ராஜீவ் ஒரு கட்டிட பொறியாளர். இவருக்கு அன்பான மனைவி, அழகான 8 வயது மகள் ஆர்த்தி என சந்தோஷமாய் போகும் குடும்பம். தொழில் போட்டியின் காரணமாக ராஜீவை பழி தீர்க்க அலையும் ஒரு மாந்தீரிக குடும்பம். ராஜீவின் குழந்தை ஆர்த்தி மீது பில்லி, சூன்யம் என ஏவப்படுகிறது.
கெட்ட சக்திகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அவன் வீட்டின் சந்தோஷம், நம்பிக்கை மகள் படும் அவஸ்தை எல்லாம் சீர்குலைக்கப் படுகிறது. அவனுடைய நாத்தீக நம்பிக்கை சீரழிக்கப்படுகிறது. அப்போது கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு ஆன்மீகவாதி ராஜீவுக்கு சம்பவங்களை எடுத்துக் கூறி முறியடிக்கும் சூட்சமத்தை கூறுகிறார். இதிலிருந்து எவ்வாறு மீண்டு தன் குடும்பத்தை காப்பாற்று கிறான் என்பதே ‘பொம்மாயி’யின் கதை. |