ஜே.பி.சந்திரஹாசன் எனும் புதுமுகம் நாயகனாக நடிக்க ஏ.எம்.பாஸ்கர் இயக்கும் படம் ‘உன்னை கண்டு நான் ஆட’ சாய் மூவி மேக்கர்ஸ் எஸ்.குமார் மற்றும் வீரா பிலிம்ஸ் எஸ்.வி.ஜெயபிரகாஷ் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.
.
நாயகன் சந்திரஹாசன் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் அவர் நாயகனாக அறிமுகமாகிறார். காதலுக்காக எல்லாவற்றையும் மறந்து போகும் ஒருவனின் கதைதான் இந்தப் படம். உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட உள்ளது. படத்தில் மலேசியாவை சேர்ந்த பிரேமா பாலன் உட்பட பலர் நடிக்க உள்ளனர். பாடல் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட உள்ளன.