மாசிலாமணி என்பதுதான் நாயகனின் பெயர். அதன் சுருக்கம்தான் மாசி. தற்போது சினேகா நடிப்பில் பவானி படத்தை இயக்கி வரும் ஜி.கிச்சா இதன் பிறகு ‘மாசி’யை இயக்க உள்ளார்.
பட்டிக்காட்டுத் தம்பி, பாட்டாளி மகன் ஆகிய படங்களை தயாரித்த கே.எஸ்.கோவைமணியின் அன்பு லட்சுமி பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது.
சென்னை, ஐதராபாத், பாங்காங், ஹாங்காங் ஆகிய நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அர்ஜூனுக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். கோட்டா சீனிவாசராவ், லால், பொன்னம்பலம் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். |