Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
ராசி: 29.3.09 முதல் 4.4.09 வரை
 
.
Sunday, 29 March, 2009 04:09 PM
.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்து வெற்றிபெறும் மேஷராசியினரே இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தால் மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். வார இறுதியில் வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம். கவனம் தேவை.
.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களை வாரத்தின் பிற்பகுதியில் செய்வது நல்ல பலன் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து  திருப்தி தரும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம்.

குடும்பத்தில் வார மத்தியில் வீண் குழப்பம் ஏற்பட்டு வார இறுதியில் நீங்கும். புத்திசாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.

பெண்களுக்கு: முயற்சிகள் சாதகமான பலன்தரும். வார இறுதியில் பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு: கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண்கவலையை தவிர்ப்பது நல்லது. 

சந்திராஷ்டமம்:  இல்லை

பரிகாரம்:  திருத்தணி முருகனை அர்ச்சனை செய்து வணங்க எல்லா கஷ்டங் களும் நீங்கி மன அமைதி உண்டாகும்.

ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிக்கும் ரிஷபராசியினரே உங்களது கருத்துக்கு  மற்றவர்களிடம் வரவேற்பு இருக்கும். வார தொடக்கத்தில் பணவரத்து இருக்கும். சந்திரன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும்.  தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சி களை மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும்.

தொழில் வியபாரத்தில் இருந்த போட்டி கள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவ தில் சிந்தனை செலுத்துவீர்கள். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனை கள் குறையும். கணவன் மனைவிக்கி டையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள்  நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை அவரால் உதவி உண்டாகும்.  

பெண்களுக்கு: தடைபட்ட காரியங் களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள்  மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும்.

மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும். 
சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு மொச்சை சுண்டல் செய்து நைவேத்யம் செய்து விநியோகம் செய்ய பணத்தட்டுப் பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

திட்டமிடுவதில் கெட்டிக்காரர்களான மிதுன ராசியினரே நீங்கள் எதிலும் சிக்காமல் நழுவுவதில் கெட்டிக்காரர். இந்த வாரம் கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள்.  வியா பாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது  சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றை யும்  திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.

குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக் களை  குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு.பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். வார தொடக்கத்தில் கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது.

பெண்களுக்கு: சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம்.

மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற் றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.

கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

ஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என்று பல முறை மனதுக்குள் கேள்வி எழுப்பி பின்னர் ஒரு முடிவு எடுக்கும் கடகராசியினரே இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். வார மத்தியில் எதிலும் சற்று கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதான மாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது.

குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமை யாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.

பெண்களுக்கு: எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு: பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது. அடுத்தவர் களிடம் பழகும்போது கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: இல்லை.

பரிகாரம்: மேல் மருவத்தூர் ஆதி பராசக்தியை வழிபட்டு வருவது காரிய தடையை நீக்கும். எதிர்ப்புகள் அகலும்.

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)


அதிகார தோரணையுடன் காணப்படும் சிம்மராசியினரே நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள். உங்கள் வழி தனி வழி என்று செயல்படுவீர்கள். இந்த வாரம் சந்திரன் சஞ்சாரம் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல் படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்க ளால் காரிய வெற்றி கிடைக்கும்.

தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள்.

குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறு வீர்கள். கணவன்மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்கு களை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது.

பெண்களுக்கு: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர் கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும்.

சந்திராஷ்டமம்: இல்லை.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் வில்வ அர்ச்சனை செய்து சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றிபெறும்.

கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)


புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்க்கும் கன்னிராசியினரே இந்த வாரம் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. சந்திரன்  சஞ்சாரம் வார மத்தியில் எல்லா காரியங்களிலும் அனுகூலத்தை தருவார். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக் கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் விறுவிறுப்படை யும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்தி கரமாக இருக்கும்.

குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக் காக செலவு செய்ய நேரிடும்.

பெண்களுக்கு: எந்த ஒரு காரியத்தை யும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு: பாடங்களை படிப்ப தில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர் களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: 29.3.2009 மற்றும் 30.3.2009 காலை 10.20 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பதும் நல்லது. புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது.
பரிகாரம்: புதன்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.

துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)


அடுத்தவரை அனுசரித்து செல்வதில் கெட்டிக்காரர்களான துலா ராசியினரே! இந்த வாரம் இறுதியில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். வார தொடக்கத்தில் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கலாம். அதனால் உங்களுக்கு நன்மையும் உண்டாகலாம். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.

தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வார இறுதியில் முன்னேற்ற நிலை காண்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும்.

குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கை துணை உங்களை அனுசரித்து செல்வார். இதனால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர் காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்குகளில் நிதான போக்கு காணப்படும்.

பெண்களுக்கு: எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மன குழப்பம் நீங்கும்.

மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்கு டன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 30.3.2009 காலை 10.20 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 1.4.2009 பகல் 1.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் எதிலும் கவனமாக இருப்பதும்நல்லது.

பரிகாரம்: கெஜலட்சுமியை வெள்ளிக் கிழமையில் பூஜித்து வர பொருள் வரத்து கூடும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)


எடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிக்கும் ஆற்றலு டைய விருச்சிக ராசியினரே இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். சந்திரன் சஞ்சாரம் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடச் செய்யும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்தி சாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலருக்கு புதிய ஆர்டர் களும் கிடைக்கும். உத்தியோகத் தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவார்கள். அதனால் எதிர்பார்த்த உதவியும் நன்மை யும் கிடைக்கும். ஆனால் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக் கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வழக்கு களை தள்ளிப்போடுவது நல்லது.

பெண்களுக்கு: எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டா கும். ஆனால் குடும்ப விஷயங்களை கூறாமல் தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு: மற்றவர்கள் கூறு வதை கேட்டு அதன்படி நடக்கும் முன்பு அது சரியா தவறா என்று யோசித்து பார்ப்பது நல்லது. பாடங்களை படிப்ப தில் கவனம்தேவை.

சந்திராஷ்டமம்: 01.04.2009 பகல் 1.10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 3.4.2009 மாலை 3.30 மணிவரை இருப்பதால் எதிலும் தடை தாமதம் உண்டாகலாம். கவனம் தேவை. புதிய காரியங்களை தள்ளி போடுவது நல்லது.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய் கிழமையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்க எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)


அமைதியுடனும் சாந்தமாக பேசும் குணமும் உடைய தனுசு ராசியினரே இந்த வாரம் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. சந்திரன் சஞ்சாரம் வார மத்தியில் பண வரவை தரும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மனம் விரும்பியது போல செயல்படு வீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்க பணிகளை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவும் இருக்கும்.

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். உறவினர் வருகை இருக்கும். குழந்தை கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர் கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.

பெண்களுக்கு: உங்களது செயல்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு: விரும்பியதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். புத்தகங்கள் கல்விக்கான உபகரணங் களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 3.4.2009 மாலை 3.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 4.4.2009 அன்று முழுவதும் சந்திராஷ்ட மம் இருப்பதால் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. தடை தாமதம் உண்டாகலாம். கவனம் தேவை.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து விநியோகம் செய்ய செல்வம் சேரும். மன அமைதி உண்டாகும்.

மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)


நியாயம், நேர்மை, இதுதான் வாழ்க்கை   என்று எண்ணும் மகர ராசியினரே இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். வார இறுதியில் வரும் வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். தடை கள் அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரம் பெருகி பணவரத்தும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும்.

வாழ்க்கை துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளை களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். வழக்கு விவகாரங்களில் காலதாமதமான நிலை காணப்படும்.

பெண்களுக்கு: தடைபட்டு வந்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும்.

மாணவர்களுக்கு: பாடங்களை படிப்பது பற்றிய கவலை நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: திங்கள் கிழமைகளில் விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றி வர கடன் தொல்லை குறையும்.  காரிய தடை நீங்கும்.

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)


உழைப்பதற்கு அஞ்சாத கும்பராசியினரே! நீங்கள் எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போன்று செயல் படுவீர்கள். இந்த வாரம் சனியின் பார்வை ராசியின் மீது விழுவதாலும் ராசியில் செவ்வாய் இருப்பதும் சகோதரர்கள் வகையில் ஏதாவது மனத்தாங்கல் ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூமி தொடர்பான பிரச்சனைகள் இழுபறியான நிலை காணப்படும். சந்திரன் சஞ்சாரம் மனதெம்பும் மகிழ்ச்சியும் தரும்.

தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்படும். வரவேண்டிய பணம் கைக்கு கிடைக்க தாமதமாகலாம். போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். நிதானமாக இருப்பது நல்லது.

குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சனைகள் நல்ல முடிவை தரும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பதைகண்டு மனம் மகிழ்வீர்கள். வழக்குகள் இழுபறியாக இருக்கும்.

பெண்களுக்கு: மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு: பாடங்களை படிப்பது பற்றிய கவலை நீங்கும். உற்சாகமான மனநிலை காணப்படும்.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சனேயருக்கு துளசிமாலை அணிவித்து அர்ச்சனை செய்து வணங்க குடும்ப கஷ்டங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


எந்த ஒரு காரியத்தையும் முன்னின்று செய்ய ஆசைப்படும் மீன ராசியினரே இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தால் வார மத்தியில் எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும்.

தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும்.

குடும்ப வேலைகள் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்கி அதனை செய்து முடிக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். வழக்குகளில் சமாதானமாக போவது நல்லது.

பெண்களுக்கு: நிதானமாக பேசி செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பணவரத்து திருப்தி தரும்.

மாணவர்களுக்கு: விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவன மாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: சாய்பாபாவை பஜனை பாடல்கள் பாடி வழிபட துன்பங்கள் விலகும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.
| |

மற்றவை :