Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
ரோபோக்கள் சூழ ஒரு டூயட்
 
.
Sunday, 29 March, 2009 11:47 AM
.
 இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிப்பில் வரும் படம் ‘கிருஷ்ண லீலை’. ஷங்கரின் உதவியாளர் ஸெல்வன் இயக்க ஜீவன், மேக்னா ஜோடியாக நடிக்க உருவாகி வரும் இந்தப் படத்தில், பாடல் காட்சிகளும் பிரம்மாண்ட முறையில் படமாக்கப் பட்டுள்ளன.
.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஒவ்வொரு பாடலும் மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டிருப்பதாக இயக்குனர் செல்வன் கூறுகிறார். நாயகன் அறிமுகமாகும் பாடல் வித்தியாசமாக வந்திருப்பதோடு நாயகியை வர்ணித்து பாடும், பெண்ணே உன் பெயர் என்ன திமிரா எனும் பாடலும் மாறுபட்டு வந்திருப்பதாக கூறுகிறார்.

இல்லாத ஊருக்கு செல்லாத பாதை தேடி எனும் டூயட் பாடலில் நாயகன் ஜீவன் மற்றும் நாயகி மேக்னா மிகுந்த நெருக்கத்தோடு நடித்துள்ளனர் என்று கூறும் அவர், கற்பனையில் அமைந்துள்ள இந்த காட்சியில் ரோபோக்கள் நடித்துள்ளது புதுமையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
| |

மற்றவை :