தியாகராஜன் இயக்கும் இந்தப் படத்தில் பிரசாந்த், தந்தை ஏற்ற மம்பட்டியான் பாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கான 80 சதவிகித ஷýட்டிங் முடிந்து விட்டதாகவும், ஒகேனக்கல், சத்யமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதியில் படப்பிடிப்பு நடந்திருப்பதாகவும் கூறும் பிரசாந்த், இந்தப் படத்தில் அப்பாவை போலவே நடிக்க முயன்றிருப்பதாகவும், தந்தையை மிஞ்ச வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறுகிறார்.
மலையூர் மம்பட்டியான் வெளியான போது எல்லோரும் தந்தையை மம்பட்டியான் என்று அழைத்தது போலவே, தன்னையும் அழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அவர், இந்தப் படத்தில் தொழில் நுட்பத்தின் உதவியோடு சண்டைக் காட்சிகள் பிரமாதமாக எடுக்கப்பட்டி ருப்பதாக கூறுகிறார்.
மலையூர் மம்பட்டியானில் சரிதா நடித்த வேடத்தில் தற்போது மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் ஜெய்சங்கர் வேடத்தில் நடித்திருக்கிறார். வடிவேலு காமெடி காட்சியில் கலக்கியிருக்கிறார். வின்னர் படத்திற்கு பிறகு வடிவேலு, பிரசாந்த் காமெடி பெரிதாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காட்டு வழி போற பொண்ணே பாட்டு ரிமிக்ஸ் ஆகியிருப்பதாக கூறும் பிரசாத், இசையமைப்பாளர் யார் என்பது சஸ்பென்ஸ் என்று கூறுகிறார். |