Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
சூப்பர் மேனாக சூர்யா
 
.
Sunday, 29 March, 2009 11:37 AM
.

 ஏவிஎம் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள ‘அயன்’ திரைப்படம் ஏப்ரல் 3-ந் தேதி திரைக்கு வரவுள்ளது. இது தன்னுடைய 23-வது படம் என்று நினைவு கூறும் சூர்யா, ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் படம் எப்படி வருமோ என்ற அச்சம் இருக்கும் என்றும், ஆனால் அந்த படத்தில் எந்தவித பயமும் இல்லாமல் நடிப்பதாகவும், படம் எதிர்பார்த்ததை போல திருப்திகரமாக வந்திருப்பதாகவும் மகிழ்ச்சியோடு கூறுகிறார்.

.
படத்தின் இயக்குனர் கே.வி. ஆனந்த் ஒரு சகோதரர் போலவே தன்னை இயக்கியதாக கூறும் சூர்யா, இந்த படத்திற்காக இதுவரை படப்பிடிப்பு நடைபெறாத இடங்களுக்கு எல்லாம் சென்று நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்கிறார். படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனம் முழு சுதந்திரம் அளித்ததாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மீண்டும் வெற்றிக் கூட்டணி அமைந்திருப்பதாகவும் அவர் கூறுகிறார். படத்தின் இயக்குனரான கே.வி.ஆனந்த் சூர்யாவை இந்தப் படத்தில் மிகவும் வித்தியாசமாக பயன்படுத்தி இருப்பதாகவும், சாமான்ய இளைஞன் சூழ்நிலையால் சூப்பர்மேனாக ஆவது பற்றி படத்தில் விவரித்திருப்பதாக கூறுகிறார்.

பலவித கெட்டப்பில் சூர்யா அசத்தியிருப்பதாவும், காமெடி காட்சி ஒன்றில் கலக்கியிருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
தமன்னா ஜோடியாக நடிக்க பிரபு, பொன்வண்ணன் உள்ளிட்ட கலைஞர்கள் நடித்திருக்கும் இந்தப் படம் சன் பிக்சர்ஸ் வெளியீடாக திரைக்கு வருகிறது.
| |

மற்றவை :