
நட்சத்திர பலத்தை நம்பாமல் கதை பலத்தை நம்பி எடுக்கப்பட்டுள்ள படம் ‘பட்டாளம்’. பிரபல இயக்குனர் லிங்குசாமி சார்பில் திருப்பதி பிரதர்ஸ் மீடியா வழங்கும் இந்தப் படத்தை ரோஹன் கிருஷ்ணா இயக்குகிறார். பள்ளியும், பள்ளி சார்ந்த சூழலிலும் நடக்கும் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் வண்ணத்துப்பூச்சி போல சிதறடிக்கும் சிறுவர், சிறுமிகளும் அவர்களோடு முக்கிய வேடத்தில் நதியாவும் நடித்திருக்கிறார்.