Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
உள்ளத்தை உருக வைத்த காட்சி
 
.
Sunday, 22 March, 2009 10:48 AM
.
 1980-களில் வெளிவந்து பெரும் வெற்றியையும், பாராட்டையும் பெற்ற ‘பாலைவனச்சோலை’ திரைப்படம் மீண்டும் தயாராகி வருகிறது. மாருதி பிலிம்ஸ் சார்பில் ஆர்.ராதா கிருஷ்ணன் தயாரிப்பில் இந்தப் படத்தை எஸ்.தயாளன் இயக்குகிறார். இந்தப் படத்திற்காக சமீபத்தில் உருக்கமான காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.
.
பிரபு, ரமணா, யுவன், இளவரசு, ஆதி ஆகிய ஐவரும் இணை பிரியாத நண்பர்கள். இவர்களில் ரமணா தனது தங்கை காயத்ரிக்கு திருமண ஏற்பாட்டை செய்கிறார். மிகுந்த பிரச்சனைக்கு நடுவே  திருமண ஏற்பாட்டை கவனித்து வருவதாக நாயகி பிரியாவிடம் பிரபு தெரிவிக்க பிரியா உடனே தனது தாயின் தாலியை கொடுக்கும் உணர்ச்சி மயமான காட்சி படமாக்கப்பட்டது.

முன்பு வெளியான ‘பாலைவனச் சோலை’ படத்தில் சந்திரசேகர் ஏற்று நடித்த பாத்திரத்தில் நிதின் சத்யாவும், ராஜீவ் நடித்த பாத்திரத்தில் அபிநயும் நடித்துள்ளனர். ஜனகராஜ் பாத்திரத்தில் சாம்சும், தியாகு பாத்திரத்தில் சத்யனும், தும்பு கைலாஷ் பாத்திரத்தில் சஞ்சீவும் நடித்துள்ளனர்.

கார்த்திகா, சுஹாசினி வேடத்தில் நடித்துள்ளார். கவி பேரரசு வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார். ஆளான ஆளு, மேகமே மேகமே ஆகிய பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்படுகிறது. இகே பாபி இசையமைக்கிறார்.
| |

மற்றவை :