Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
வெயிலில் நடனமாடிய சந்தியா
 
.
Sunday, 22 March, 2009 10:37 AM
.
 ‘மஞ்சள் வெயில்’ படத்திற்காக நாயகன் பிரசன்னாவும், நாயகி சந்தியாவும் கடும் வெப்பத்தை தாங்கிக் கொண்டு நடனமாடினர். ஹாசினி சினிமாஸ் சார்பில் மஞ்சள் வெயில் படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்திற்காக சென்னையில் சைலாலோ... எனும் பாடல் படமாக்கப்பட்டது.
.
நாயகன் பிரசன்னா, நாயகி சந்தியா, பாலா உள்ளிட்டோர் இந்தப் படத்திற்கு நடனமாடினர். இந்த பாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று படத்தின் இயக்குனர் வசீகரன் நம்புகிறார். பரத்வாஜ் இசையமைத் திருக்கிறார். பா.விஜய் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

இந்தப் படத்திற்காக தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் 20 மாடி கட்டிடத்தின் மேலே உள்ள ஹெலிபேடில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.

அப்போது 108 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் யூனிட்டில் இருந்த இருவர் மயங்கி விழுந்தனர். ஆனால் இந்த வெப்பத்தையும் தாங்கிக் கொண்டு நாயகன் பிரச்சனா வும், நாயகி சந்தியாவும் பாடல் காட்சியில் ஆடி அசத்தியுள்ளனர். விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது.
| |

மற்றவை :