தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.
குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை. கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.
பெண்களுக்கு: எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.
மாணவர்களுக்கு: ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்.
சந்திராஷ்டமம்: 16032009 அன்று காலை 5.30 மணி முதல் 18.3.2009 மாலை 4.15 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தடைதாமதம் உண்டாகலாம்.
பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று வீரபத்திர ஸ்வாமியை வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்த கொள்ளும் ரிஷபராசியினரே நீங்கள் கடுமையாக உழைக்க தயங்காத வராக இருப்பீர்கள். இந்த வாரம் எதிர் பாராத திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். ராசிக்கு 11ல் புதன் சஞ்சாரம் இருப்பதால் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். சூரியன் சஞ்சாரம் பொருள் வரவை தரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார் கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.
கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகர மாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர் கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளை களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
பெண்களுக்கு: திறமையாக சமாளித்து எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங் களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும்.
மாணவர்களுக்கு: தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப் படும்.
சந்திராஷ்டமம்: 18.03.2009 மாலை 4.15 மணி முதல் தொடங்கி 21.03.2009 அன்று அதிகாலை 4 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும், எதிலும் கூடுதல் கவனத்து டன் இருப்பதும் நல்லது.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய் தொழில் சிறக்கும்.
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
பேச்சாற்றல் மூலம் எப்படிப்பட்ட சிக்கலான காரியங்களையும் சுமூகமாக முடிக்கும் திறமை உடைய மிதுன ராசியினரே இந்தவாரம் ராசியாதிபதி புதன் ராசிக்கு 10ல் சஞ்சாரம் செய்வதும் சூரியனுடன் சேர்க்கை பெறுவதும் பொருள் வரவையும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தரும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங் களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம்.
செய் தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும்.
குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமைகண்டு மனமகிழ்ச்சி கொள்வீர்கள்.
பெண்களுக்கு: வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
மாணவர்களுக்கு: கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். சந்திராஷ்டமம்: 21.3.2009 அன்று சந்திராஷ்டமம் இருப்பதால் மிகவும் கவனமாக இருப்பதுடன் புதிய முயற்சிகளை தள்ளிபோடுவதும் நல்லது.
பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும்நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)
தயாளகுணம் படைத்த கடகராசியினரே நீங்கள் இனிமையாக பேசி மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். இந்த வாரம் ராசிக்கு 9ல் புதன் சூரியன் இணைந்து சஞ்சாரம் செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து செய்வது நல்லது. மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்து வது நல்லது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே நேரத் தில் சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்ப வர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலக வேலைக ளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர் களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங் களை கூறுவதை தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷன் ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி செயல்படுவது நன்மை தரும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள்.
பெண்களுக்கு: நண்பர்களிடம் உறவினர் களிடம் கவனமாக பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். புதிய செயல்களை யோசித்து செய்வது நல்லது.
மாணவர்களுக்கு: பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப் பெண் பெற உதவும்.
சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்பாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கருமமே கண்ணாக இருக்கும் சிம்மராசியினரே நீங்கள் எல்லோராலேயும் நேசிக்க கூடியவராகவும் இருப்பீர்கள். இந்தவாரம் முன்புதடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். புதன் சஞ்சாரம் ராசிக்கு எட்டில் இருப்ப தால் வெளியூர் பயணங்கள் உண்டா கும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பவர்கள் சூரிய சஞ்சாரம் புதனுடன் சேர்ந்து இருப்பது மன தெளிவை உண்டாக்கும். ஆக்கபூர்வமான யோசனை கள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்கு வரத்து மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதுடன் ஆதாய மும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார் கள். பணவரத்தும் இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.
கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.
பெண்களுக்கு: தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனதெளிவு உண்டாகும். பணவரத்து இருக்கும்.
மாணவர்களுக்கு: திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். 3 பேருக்கு கோதுமை தானம் செய்வது நல்லது.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
நட்புக்கு முதலிடம் கொடுத்து காரியங் களை செய்யக் கூடியவராக இருக்கும் கன்னிராசியினரே நீங்கள் வசதிகள் இருந்தாலும் சாதாரணமான தோற்றம் உடையவராக இருப்பீர்கள். இந்த வாரம் ராசியாதிபதி புதன் ராசிக்கு 7ல் சஞ்சாரம் செய்வதும் சுக்கிரன் சேர்க்கை பெறுவதும் பணவரத்தை அதிகரிக்கும். விருப்பமானவர் களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடை வீர்கள். மனதுணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்த யங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர் களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும். கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
பெண்களுக்கு: மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு: கவனமாக பாடங் களை படிப்பது நன்மை தரும். அடுத்தவர் களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: விநாயக பெருமானை அருகம் புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுவது தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கும். செல்வம் சேரும்.
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரை ஊண், உறக்கம் இன்றி கடுமை யாக உழைக்கும் துலாராசியினரே அனை வரையும் அனுசரித்து செல்வதில் திறமை உடையவர். இந்தவாரம் ராசிக்கு ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராசியாதிபதி சுக்கிரனுடன் புதன், சூரியன் சேர்ந்து இருப்பது எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பண வரத்து திருப்தி தரும், கடன் விவகாரங் களில் எச்சரிக்கை தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர் பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம். மேல் அதிகாரி களால் உத்தி யோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும்.
வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டா கும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
பெண்களுக்கு: மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற் றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
அனைவருடன் நல்லமுறையில் பழகக் கூடிய விருச்சிகராசியினரே உங்களுக்கு வரும் முன்கோபத்தை தவிர்ப்பது முன் னேற்றத்துக்கு உதவும். இந்தவாரம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர் பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய் வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.
தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்து வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்க ளுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாக லாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது.
பெண்களுக்கு: மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பண வரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு: சக மாணவர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: அறுபடை வீடு முருகனை தரிசித்து தீபம் ஏற்றி வழிபட இழுபறி யான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
நிதானமாகவும், செம்மையாகவும் காரியத்தை செய்து வெற்றிபெறும் தனுசு ராசியினரே உங்களை எல்லோரும் நேசிப்பார்கள். இந்த வாரம் ராசிக்கு நான்காம் இடத்தில் சூரியன், சுக்கிரனு டன் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் புதன் பணவரத்தை அதிகப்படுத்துவார். எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர் பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வார இறுதியில் உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். பிள்ளைகள் மனம் மகிழும் படி நடந்து கொள்வார்கள். வீண் விவ காரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு: தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும்.
மாணவர்களுக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து வர குரு அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
எல்லோராலும் பாராட்டப்படும் வகை யில் நடந்து கொள்ளும் மகர ராசியினரே இந்த வாரம் ராசிக்கு மூன்றாம் இடத்தில் புதன் சஞ்சாரம் தொடங்குவதாலும், சூரியன், சுக்கிரன் சேர்க்கை பெற்று இருப்பதும் வரவை போலவே செலவும் இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். எனவே கவனமாக இருப்பது நல்லது. திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக் கும் போது கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்ப வர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக் கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பி னர்கள் பற்றிய கவலைகள் நீங்கும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக் கும். உறவினர்கள் வருகையும் அவர்க ளால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.
பெண்களுக்கு: வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கவனம் தேவை. முயற்சிகள் தாமதப்படும்.
மாணவர்களுக்கு: வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை. சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணை தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும்.
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
மனத்துணிவும், எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் அதிகம் பெற்ற கும்பராசியினரே இந்த வாரம் ராசிக்கு இரண்டில் புதன், சூரியன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவும் ஏற்படும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.
தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பணதேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். ஆனால் செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். அவற்றை லாவகமாக கையாண்டு சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயங் களை பேசாமல் இருப்பதன் மூலம் ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கி யத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.
பெண்களுக்கு: பணவரத்து திருப்தி கரமாக இருக்கும். பயணங்களின் போது பொருட்களின் மீது கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு: தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தியையும் தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும். மனநிம்மதி ஏற்படும்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
தூய உள்ளம் படைத்த மீன ராசியினரே நீங்கள் எதிலும் நியாயமும், நேர்மையும் இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பீர்கள். இந்த வாரம் சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். ராசியில் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சாரம் இருக்கும் போது திடீர் கோபம் உண்டாகும். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் குறையும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். ஆனால் கவனமாக இருப்பது நல்லது.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பெரி யோர் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளி டம் இனிமையாக பேசுவது நல்லது. பெண்களுக்கு: கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கூடுதலாக எதிலும் உழைக்க வேண்டி இருக்கும்.
மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடனும் ஆசிரியர் களின் உதவியுடனும் பாடங்களை படிப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 15.03.2009 அன்று முழுவதும் 16.03.2009 அதிகாலை 5.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் தடை தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. புதிய காரியங்களை தள்ளிபோடுவது நல்லது.
பரிகாரம்: ராகவேந்திர ஸ்வாமியை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும். |