ஊனமுற்றோருக்காக விசேஷமான சக்கர நாற்காலியை கண்டுபிடிக்கும் கதாநாயகன் சோதனைக்கு உள்ளாகி தானே அதனை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு மீண்டு வருவதுதான் தலையெழுத்து படத்தின் கதை.
.
இந்தப் படத்தை ரிச்சர்ட் ராஜ் தயாரிக்கிறார். அவரே நாயகனாக நடித்துள்ளார். கதையும் அவருடையது. பூஜா காந்தி நாயகியாக நடித்துள்ளார். எத்திராஜ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். காட்வின் இசையமைத்துள்ளார். ஊனமுற்ற குழந்தைகள் காப்பகத்தில் நடைபெறும் இந்த கதை மிகவும் உருக்கமான வகையில் படமாக்கப்பட்டு வருகிறது.