ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
திறமையாக எந்த ஒரு காரியத்தையும் செய்து பாராட்டும், மதிப்பும், மரியாதை யும் பெறும் ரிஷப ராசியினரே இந்த வாரம் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. செவ்வாய் சஞ்சாரம் வார இறுதியில் ராசிக்கு 10-ல் இருப்பதும் சூரியன், புதனுடன் சேர்க்கை பெறுவதும் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். பயணங்கள் ஏற்படலாம்.
தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர் கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. உத்தி யோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்து பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும். குழந்øதைகளுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். நிதானம் தேவை.
பெண்களுக்கு: உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி பெறும்.
மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். வாகனங்க ளில் செல்லும் போது கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகா லட்சுமியை தீபம் ஏற்றி வணங்க பொருளா தார சிக்கல் தீரும். பண வரத்து கூடும். மனம் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
நல்லவர், கெட்டவர் என்று பாராமல் எல்லோரிடமும் நாசூக்காக நடந்து கொண்டு அவர்களை நன்கு பயன் படுத்தி காரிய வெற்றி பெறும் திறமை யுள்ள மிதுனராசியினரே இந்த வாரம் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். ராசியாதிபதி புதன் ராசிக்கு 9-ல் சூரியனுடன் சேர்க்கை பெற்று இருப்பதும் வார இறுதியில் செவ்வாயு டன் சேருவதும் காரிய தாமதத்தை உண்டாக்கும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது சிரமம்.
எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இருக்காது. நிதானமாக நடக்கும். பணவரத்து தாமதப் படலாம். ஆர்டர்கள் தொடர்பாக வீண் அலைச்சல் உண்டாகலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கள். வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நன்மை தரும். உறவினர் நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
பெண்களுக்கு: குழப்பங்கள் நீங்கள் மனதில் தெளிவு உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.
மாணவர்களுக்கு: முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: புதன் கிழமையில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.
கடகம் (புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)
எந்த ஒரு விஷயத்தையும் அது எப்படி நடக்கும் சாதகமா பாதகமா என்று முன்கூட்டியே யூகித்து அதற்கு ஏற்ப நடந்து கொள்ளும் திறமையுடைய கடக ராசியினரே இந்த வாரம் ராசிக்கு 7-ல் சஞ்சாரம் செய்த செவ்வாய் வார இறுதியில் ராசிக்கு எட்டாம் இடத்திற்கு பெயர்ச்சியடைந்து சூரியன் புதனுடன் சேர்க்கை பெறுவது வீண் செலவை உண்டாக்கும். எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் தடை தாமதம் உண்டாகலாம். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. ராசியாதிபதி சந்திரன் ராசிக்கு 11-ல் வார தொடக்கத்தில் சஞ்சாரம் செய்வதால் வருமானம் கூடும். வார இறுதியில் ராசியில் சஞ்சாரம் செய்வதால் மன திருப்தி உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் உண்டாகும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் செலவு உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். வார இறுதியில் மகிழ்ச்சி உண்டாகும்.
பெண்களுக்கு: அடுத்தவர்கள் பிரச்ச னைகளை தீர்க்க முயற்சிகளை மேற் கொள்வதை தவிர்ப்பது நல்லது. தேவை யற்ற செலவு ஏற்படலாம். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு: ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: திங்கள் கிழமையில் ஆதி பராசக்தியை வழிபடுவது காரிய தடை களை நீக்கும். மன அமைதியை தரும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)
வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று லட்சியத்து டன் இருக்கும் சிம்மராசியினரே நீங்கள் எதிலும் முதலாவதாக இருப்பீர்கள். இந்த வாரம் வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். ராசி யாதிபதி சூரியனுடன் வார இறுதியில் செவ்வாய் இணைந்து ராசிக்கு 7-ல் சஞ்சாரம் செய்வதால் பணவரத்து எதிர் பார்த்ததை விட குறையும். நினைத்த தற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை. மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம்.
தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி உண்டாகும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்குமா என்ற எண்ணம் உண்டாகும். கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். உத்தியோகத் தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரும். மேல் அதிகாரிகள் கூறு வதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது.
குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கணவன், மனைவியி டையே மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எனவே கவனமாக எதையும் பேசுவது நல்லது. பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். அக்கம் பக்கத்தி னருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு: விவேகமாக செயல் படுவது வெற்றியை தரும். எதிர்பார்த்த தற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை. வீண் அலைச்சல் ஏற்படும்.
மாணவர்களுக்கு: ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோயிலுக்கு சென்று சிவனையும் நவ கிரகத்தில் சூரியனையும் தீபம் ஏற்றி வழி படுவது எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
சாதுர்யமாக பேசி சகல காரியங்களை யும் சாதிக்கும்திறமை உள்ள கன்னி ராசியினரே இந்த வாரம் உங்களுக்கு எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். ராசிக்கு ஐந்தில் குரு, ராகுவுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்த செவ்வாய் வார இறுதியில் ராசிக்கு 6-ல் சஞ்சரிக்கும் சூரியன், புதனுடன் சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் தகராறுகள் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமை களை பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப் பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி கள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். பணவரத்து கூடும்.
குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
பெண்களுக்கு: சாதக பாதகங்களை பற்றி கவலைப்படாமல் எந்த காரியத்தை யும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.
மாணவர்களுக்கு: போட்டிகள் குறை யும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
சந்திராஷ்டமம்: 28.2.2009 இரவு 10.20 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 2.3.2009 இரவு 2.20 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் காரியங்க ளில் தடை தாமதம் உண்டாகலாம். கவனம் தேவை.
பரிகாரம்: புதன்கிழமையில் ஆஞ்சனே யரை வெண்ணை சாற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ தைரியம் கூடும்.
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
உழைப்புக்கு ஏற்ற உயர்ந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்பதை குறிக் கோளாக கொண்டு செயல்படும் துலா ராசியினரே இந்த வாரம் சின்ன விஷயங் களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். எனவே கோபத்தை கட்டுப் படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதக மாக நடைபெறும். ராசிக்கு நான்கில் குரு, ராகுவுடன் சேர்ந்து சஞ்சரித்த செவ்வாய் வார இறுதியில் ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் சூரியன் புதனுடன் சேர்க்கை பெறுவ தால் எதிர்பாராத பண தேவை உண்டா கும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர் கள். எதிலும் இழுபறியான நிலை காணப் படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச் சலும் இருக்கும். வீண் பகை உண்டாக லாம். கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பண வரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். கடன் விஷயங்களை தள்ளிபோடு வது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட் களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர் களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது.
பெண்களுக்கு: கோபத்தை கட்டுப் படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம்.
மாணவர்களுக்கு: பாடங்களை படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 02.03.2009 இரவு 2.20 மணி முதல் 05.03.2009 காலை 5.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. தடை தாமதம் ஏற்படலாம்.
பரிகாரம்: மாரியம்மனை வெள்ளிக் கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)
கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு கோபப்பட்டாலும் அதை மனதில் கொள்ளாமல் அடுத்தவருக்கு உதவி செய்யும் விருச்சிகராசியினரே இந்த வாரம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். ராசிக்கு மூன்றில் சஞ்சாரம் செய்த ராசியாதிபதி செவ்வாய் வார இறுதியில் ராசிக்கு நான்கில் ஏற்கனவே சஞ்சரிக்கும். சூரியன் புதனுடன் சேர்க்கை பெறுவதால் போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது.
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
பெண்களுக்கு: பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.
மாணவர்களுக்கு: கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 5.3.2009 அதிகாலை 5.10 முதல் 7.3.2009 காலை 7.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை. புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது.
பரிகாரம்: செவ்வாய் கிழமையில் நவகிரகத்தில் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றி பெறும். மன துணிவு உண்டாகும்.
மாணவர்களுக்கு: பாடங்களை படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 02.03.2009 இரவு 2.20 மணி முதல் 05.03.2009 காலை 5.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. தடை தாமதம் ஏற்படலாம்.
பரிகாரம்: மாரியம்மனை வெள்ளிக் கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)
உங்கள் திறமைகளை மூலதனமாக கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் தனுசு ராசியினரே இந்த வாரம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். இதுவரை ராசிக்கு இரண்டாம் இடத்தில் ராசியாதிபதி குரு, ராகுவுடன் சேர்ந்து இருந்த செவ்வாய் வார இறுதியில் ராசிக்கு மூன்றில் சஞ்சரிக்கும் சூரியன் புதனுடன் சேர்க்கை பெறுவது எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற் கொண்டு வியாபாரத்தை விரிவு படுத்து வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.
பெண்களுக்கு: காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும்.
மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.
சந்திராஷ்டமம்: 07.03.2009 காலை 7.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி அன்று முழுவதும் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை.
பரிகாரம்: சாய்பாபாவை வணங்கி வர மனதில் தைரியம் கூடும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
உழைப்புக்கு அஞ்சாத உறுதியான மனம் கொண்ட மகர ராசியினரே இந்த வாரம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். ராசியில் சஞ்சரிக்கும் குரு, ராகுவுடன் சேர்ந்து சஞ்சரித்த செவ்வாய் ராசிக்கு இரண்டில் சஞ்சாரம் செய்யும். சூரியன், புதனுடன் வார இறுதியில் சேருவதால் எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் மன வருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை உருவாகலாம். எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படலாம். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது.
பெண்களுக்கு: கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும்.
மாணவர்களுக்கு: திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரபகவானை நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா காரியங்களும் வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் பெறும்.
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
அனுபவ அறிவைக் கொண்டு எந்த பிரச்சனை வந்தாலும் எளிதில் சமாளிக் கும் திறமை உடைய கும்ப ராசியினரே இந்த வாரம் அறிவு திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் என்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை கள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர் கள். ராசிக்கு 12-ல் குரு, ராகுவுடன் இணைந்து சஞ்சாரம் செய்த செவ்வாய் வார இறுதியில் ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், புதனுடன் சேர்க்கை பெறுவ தால் வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்க ளின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்க ளில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சனை வராமல் தடுக்கும். கணவன்-மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைப்பது நல்லது.
பெண்களுக்கு: அறிவுபூர்வமாக செயல் பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு: எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல் படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர் கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கிடைத்தது எதையும் சாமர்த்தியமாக தக்க வைத்துக்கொள்வதில் திறமையு டைய மீன ராசியினரே இந்த வாரம் பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ராசிக்கு 11-ல் குரு, ராகுவுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்த செவ்வாய் வார இறுதியில் அங்கிருந்துபெயர்ச்சியடைந்து ராசிக்கு 12-ல் சஞ்சாரம் செய்யும் சூரியன் புதனுடன் சேர்க்கை பெறுவது இட மாற்றத்தை ஏற்படுத்தும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டா கும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப் படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங் களில் கொடுக்கல் வாங்கலி லும் எச்ச ரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களால் மன வருத்தம் ஏற்படலாம். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட் களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும்.
பெண்களுக்கு: பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க காலதாமதமாகலாம். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப் பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: ஸ்ரீராகவேந்திரரை வியாழக் கிழமையில் வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மன அமைதி ஏற்படும். |