கருணாஸ் இசைக்கு கடும் போட்டி ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் ராஜாதிராஜா படத்துக்கு நகைச்சுவை நடிகர் கருணாஸ் இசையமைக்கிறார் என்று தெரிந்ததும், அப்படத்தின் ஆடியோ உரிமையை வாங்க பல பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.
இது ஒரு பக்கமிருக்க, இன்னொரு பக்கம், தான் முதன் முறையாக இசையமைக்கும் ராஜாதி ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவை வித்தியாசமாக நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார் கருணாஸ். அவரது விருப்பத்தின்படி, ராஜாதிராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவை எப்படி நடத்தலாம் என்று கருணாஸ், லாரன்ஸ், ஷக்தி சிதம்பரம் மூவரும் ஆலோசனை செய்து வருகிறார்கள்.
அலிபாபா கிருஷ்ணாவின் வியூகம் அலிபாபா படத்தில் கதாநாயகனாக அறிமுகமான கிருஷ்ணாவுக்கு நிறைய புதுப்பட வாய்ப்புகள் தேடி வந்திருக்கின்றன. அடுத்தப் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கதைகளை கேட்டு வருகிறார். விரைவில் தன் அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட இருக்கிறார் கிருஷ்ணா. |