கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு, இம்சை அரசன் 23-ம் புலிகேசி மூலம் தமிழில் வரலாற்று திரைப்படத்தை எடுத்து வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குனர் சிம்புதேவன், ஜெய்சங்கர் காலத்துக்கு பிறகு, தமிழில் கவுபாய் பாணி படத்தை இயக்க உள்ளார்.
.
இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் என்னும் பெயரில் மேற்கத்திய பாணியில் தயாராகும் இந்த படத்தில், லாரன்ஸ் மற்றும் பத்மப்ரியா நடிக்க உள்ளனர். லஷ்மிராய், நாசர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.
கவுபாய் கதையம்சம் கொண்ட கலக்கலான காமெடி படமாக இந்த படம் உருவாகும் என சிம்புதேவன் நம்பிக்கை தெரிவிக்கிறார். மத்திய பிரதேசம் மற்றும் வட இந்தியாவில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. ஏ.ஜி.எஸ். பிலிம் எண்டர்டைம்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.