கதாநாயகியோ அவனுக்கு பதில் சொல்லாமல் இருந்து விட்டு இந்தியாவுக்கு புறப்படும் முன் தனது காதலை வெளிப்படுத்திவிட்டு வருகிறாள்.
நாயகன் அவளை தேடி இந்தியாவுக்கு வருவதையும், பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு காதல் நிறைவேறுவதையும் படம் ஜனரஞ்சகமாக சொல்கிறது. வி.கே. மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்த படத்தை, வீராப்பு, ஐந்தாம்படை ஆகிய படங்களை இயக்கிய பத்ரி இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய வெளிநாடுகளில் நடைபெறுகிறது.
பிரபு மற்றும் ரஞ்சித் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிலம்பாட்டம் படத்தில் அறிமுகமான சனாகான் நாயகியாக நடிக்கிறார். 2-வது நாயகியாக ரூபாலி நடிக்கிறார்.