ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை அவசியம் என்பதை வலியுறுத்தும் இந்த படத்தில் விசு, மணிவண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், கிரேன் மனோகர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். நடிகைச்சுவை நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் இந்த படத்தில் சொந்த குரலில் ஒரு கானா பாடலை பாடி அசத்தியிருக்கிறார்.
இந்தபாடலுக்கு ரிஷா ஆடியுள்ளார். இந்த குத்து பாடல் ரசிகர்களை பெரிதும் கவரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் 7 பாடல்கள் உள்ளன. இதில் 5 பாடல்களை தயாரிப்பாளர் எஸ்.பி. சந்திரசேகர் எழுதி பாடியுள்ளார். எஸ்.டி. குணசேகரன் எழுதி, இயக்கியுள்ளார். |