Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
சூப்பர் சிங்கரில் கருப்பு-வெள்ளை சுற
 
.
Sunday, 01 March, 2009 11:32 AM
.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இளம் பாடகர்களின் இசைத் திறமையை கண்டறியும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வாரம் கருப்பு-வெள்ளை சுற்றாக அமைகிறது. இந்நிகழ்ச்சியில் வாரந்தோறும் வித்தியாசமான கருவோடு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் கருப்பு-வெள்ளை சுற்றாக அமைகிறது.
.
பங்கேற்கும் பாடகர்கள் கருப்பு-வெள்ளை திரைப்பட பாடல்களை பாடி அசத்த உள்ளனர். நடிகை மனோரமா, மூத்த பின்னணி பாடகர் பி.பி.சீனிவாஸ் மற்றும் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
நாளை தொடங்கி புதன் கிழமை வரை இரவு 9 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
| |

மற்றவை :