நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய நான் கடவுள் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாலா பிரத்யேகமாக போட்டு காட்டினார். படத்தை பார்த்த ரஜினிகாந்த், இயக்குனர் பாலாவையும், நடிகர் ஆர்யாவையும் தனது வீட்டுக்கு அழைத்து வெகுவாக பாராட்டினார்.
நீங்கள் மட்டுமே இதுபோன்ற படத்தை எடுக்க முடியும் என்று புகழ்ந்த ரஜினிகாந்த், படத்தை பார்த்து தான் பிரமித்து போனதாகவும், படத்தை கொண்டுசென்றுள்ள விதம் பாராட்டக்கூடியது என்றும் கூறினார். அடிக்கடி தான் இமயமலைக்கு செல்லும் போதெல்லாம் பல அகோரி சாமியார்களை சந்தித்திருப்பதாக தெரிவித்த ரஜினிகாந்த், ஆர்யா தனது நடிப்பின் மூலம் அவர்களை கண்ணெதிரே கொண்டுவந்து நடமாடவிட்டிருப்பதாக கூறினார்.
சிறப்பாக நடித்த ஆர்யாவை பாராட்டிய அவர், ஆர்யாவுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்றார். நான் கடவுள் திரைப்படம் ஒவ்வொரு தமிழனையும் பெருமைகொள்ள வைத்திருக்கிறது என்று ரஜினிகாந்த் பெருமிதத்துடன் தெரிவித்தார். |