Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
நடிகர் விவேக் பேட்டி
 
.
Monday, 26 January, 2009 10:41 AM
.
சென்னை, ஜன. 26: நல்ல கருத்துக்களை கூறுவதற்கு கிடைத்த அங்கீகாரமாக பத்மஸ்ரீ விருதை கருதுவதாக நடிகர்  விவேக் கூறியுள்ளார். இந்த ஆண்டுக்கான பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் நகைச்சுவை நடிகர் விவேக், பத்மஸ்ரீ விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
.
இந்த விருது கிடைத்தது குறித்து அவரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது: நகைச்சுவை நடிகர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நானே பல முறை ஆதங்கத்துடன் பேசியுள்ளேன்.

இப்போது எனக்கே அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருது கிடைத்ததற்கு தமிழக முதல்வர் கருணாநிதிதான் முக்கிய காரணம். அவர் மூலமாகத்தான் என்னைப்பற்றிய விவரங்கள் மத்திய அரசுக்கு தெரிய வந்துள்ளது.

காமெடி மூலம் நல்ல கருத்துக்களை சினிமாவில் கூறி வந்துள்ளேன். அதனால்தான் இந்த விருதை மத்திய அரசு வழங்குகிறது.
தொடர்ந்து இதேபோன்று நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்ற உத்வேகத்தை இந்த விருது அளித்துள்ளது.

இந்த நேரத்தில் எனது பெற்றோர், எனது குருநாதர் பாலச்சந்தர், தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விவேக் கூறினார்.
| |

மற்றவை :