பாலிவுட், ஹாலிவுட் என்று பறக்க துவங்கிய ஸ்ரேயா தற்காலிகமாக கோலிவுட்டிற்கு விடை கொடுத்திருந்தார்.
ஆனால் மற்ற படங்கள் கைகொடுக்காத நிலையில் மீண்டும் தமிழில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார் ஸ்ரேயா.
தற்போது சரத்குமாரிடம் ஜக்குபாய், விக்ரமுடன் கந்தசாமி, விஷாலுடன் தோரணை என 3 படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவுடனும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி யிருக்கிறார். இந்த படங்கள் அனைத்தும் இந்த ஆண்டிலேயே வெளிவர இருப்பதால் மீண்டும் தமிழில் ஒரு ரவுண்ட் வர தயாராகி வருகிறார் ஸ்ரேயா. |