இயக்குனர் செல்வா இப்படத்தை எடுத்து வருகிறார். ஏற்கனவே நடிகர் ஜீவன் கதாநாயகனாக நடித்த "நான் அவனில்லை' படத்தை எடுத்த செல்வா, தற்போது விநயை வைத்து இப்படத்தை எடுத்து வருகிறார்.
இப்படத்தில் ஸ்நேகா, கார்த்திகா, சந்தியா, கஸ்தூரி உள்ளிட்ட 5 கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் கதாநாயகனை 5 மாணவிகள் கலாட்டா செய்து காதலிப்பதே படத்தின் கதையாகும். தற்காலத்திற்கேற்ற வகையில் கவர்ச்சி அம்சங்கள் கூடுதலாக வைத்து இப்படத்தை கலர் புல்லாக எடுத்து வருகிறாராம் இயக்குனர் செல்வா.
படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. |