தமிழ் சினிமாவையும், இசையையும் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் இசை ராஜ்யம் நடத்தி வந்துள்ளனர். அந்தவகையில் மேற்கத்திய இசை மோகத்தில் இருந்து தமிழர்களை விடுபடவைத்த பெருமை இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜாவையே சேரும்.