Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
கமல் வழியில் தனுஷ்
 
.
Tuesday, 13 January, 2009 03:32 PM
.

தொடர் வெற்றிகளை  குவித்து வரும் தனுசின் பொங்கல் விருந்தாக  திரைக்கு வந்திருக்கும் படம்தான் படிக்காதவன்.

.
 தனது மாமனார் ரஜினிகாந்தை போலவே  தனக்கென்று  ஒரு பாதையை  வகுத்து கொண்டு காமெடி மற்றும் சென்டிமென்ட் என்ற  சமவிகிதத்தில்  வெற்றியை  ருசித்து வருகிறார் தனுஷ்.

அந்தவகையில் தற்போது திரைக்கு வந்திருக்கும் படிக்காதவனும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து  தனுஷிடம் பேசிய போது, அமைதியான முறையில் அலட்டல் இல்லாமல் அவர் அளித்த பேட்டி வருமாறு:

 யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு முழுநீள ஆக்ஷன் படத்தில் நடிக்கலாம் என்று  திட்டமிட்டிருந்தேன்.  அப்பொழுது இந்த கதையை இயக்குனர் சுராஜ் என்னிடம் கூறினார்.
எந்த அளவிற்கு சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கு நகைச்சுவை காட்சிகளும்  இருந்ததால்  கதையை கேட்ட மாத்திரத்திலேயே எனக்கு பிடித்து விட்டது.

மேலும்  விவேக்குடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.  கேமராவுக்கு முன்பும் சரி, பின்பும் சரி அவர் செய்யும் கலாட்டாக்கள்  நம்மையே மறந்து சிரிக்க வைக்கிறது.

முதலில் இந்த படத்திற்கு படிக்காத மேதை என்று பெயர் சூட்ட  திட்டமிட்டிருந்தார்கள்.  பிறகு படிக்காதவன் என்ற பெயர் இறுதி செய்யப்பட்டது. சூப்பர் ஸ்டார் நடித்த  படத்தின் பெயரை தேர்வு செய்துள்ளீர்களே என்று  நான் இயக்குனரிடம் கேட்ட போது, கதைக்காகத்தான் இப்படி தேர்வு செய்தோம்.  மற்றபடி எந்தவித உள்நோக்கமும் இல்லை என்று அவர் கூறினார். அதனால் நானும் எதுவும் சொல்லவில்லை. எனக்கும் அந்த தலைப்பு பிடித்திருந்தது. 

அபூர்வ சகோதரர்கள் படத்தில்  கமல்  சார் குள்ள வேடத்தில் நடித்திருப்பார். அந்த படம் பார்த்துவிட்டு நான் பிரமித்துவிட்டேன். என்றாவது ஒருநாள் அதுபோன்று நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  இந்த படத்தில் அது நிறைவேறியுள்ளது.

பாடல் காட்சி ஒன்றில் சிறிது  நேரத்திற்கு குள்ள கமல் போன்று குள்ள தனுஷாக வந்துள்ளேன். இது எனக்கு  மனநிறைவை தந்துள்ளது. அதே போன்று அந்த பாடலில் மிகவும் குண்டான தோற்றத்துடனும் காட்சி தருவது போன்று நடித்தது  மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் ஒரு தரமான படமாக படிக்காதவன் வந்துள்ளது பெருமையாக இருக்கிறது.
| |

மற்றவை :