Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
தமன்னா வெற்றியின் தேவதை
 
.
Tuesday, 13 January, 2009 03:28 PM
.

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் நடிகை தமன்னா. தனுசுடன் நடித்துள்ள படிக்காதவன் இந்த பொங்கலுக்கு ரிலீசாகி இருக்கிறது.  தமன்னா நடித்த  படம் பொங்கலுக்கு ரிலீசாவது இதுவே முதல்முறையாகும்.

.
இதைத் தொடர்ந்து கார்த்திக்குடன் பையா, சூர்யாவுடன் அயன், அறிமுக நடிகர் சித்தார்த்துடன் ஆனந்த தாண்டவம் போன்ற படங்களில்  நடித்து வருகிறார்.
பொங்கல் மலருக்காக   10 கேள்விகளை வீச இனிப்பான  பதில்களை அவர் நமக்கு தந்தார்.

* கல்லூரி படத்திற்கும், படிக்காதவனுக்கும் வித்தியாசம் என்ன?
கல்லூரி படத்தில்  மாணவி, படிக்காதவன் படத்தில் மிரட்டல் நாயகி.

* கிளாமரா? நடிப்பா? முக்கியத்துவம் எதற்கு?
நடிப்பிற்கு முன்னுரிமை கொடுத்து தேவைப்பட்டால் கிளாமருக்கும் தயார்.

* நம்பர் 1 நடிகையாவது லட்சியமா?
எண்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

* இஷ்ட தெய்வம்?
திருப்பதி பாலாஜி

* கஷ்டகாலம்?
சக நடிகர்கள் சிறப்பாக நடிக்கும் போது  நாம் அதற்கு இணையாக நடிக்க வேண்டுமே என்று சிந்திக்கும் வினாடிகள்.

* சிறப்பாக நடித்த காட்சிகள் வெட்டப்படும் போது?
அடுத்த முறை வெட்ட முடியாத அளவுக்கு நடிக்க வேண்டும் என்று நினைத்து கொள்வேன்.

* சினிமாவில் நண்பர்கள்?
சினிமாவே என்னுடைய முதல் தோழன். அந்தவகையில் சினிமாவில் நடிப்பவர்கள் எல்லாருமே எனக்கு நண்பர்கள்தான்.

* மறக்க முடியாத படப்பிடிப்பு?
கல்லூரி படத்தின் கிளைமேக்ஸ்

* மற்ற மொழிகளுக்கு எந்தவிதத்தில் முன்னுரிமை?
கதையம்சத்திற்கே எப்பொழுதும் முன்னுரிமை

* பிடித்த நடிகர் இயக்குனர்?
சூப்பர் ஸ்டார் மணிரத்னம்
| |

மற்றவை :