பேட்டி
நடிப்பு தான் உலகம், நடிப்பு தான் வாழ்க்கை என்று ஒரு நடிப்பு வெறி கொண்ட சைத்தானாகவே மாறி இருக்கும் விஜய் ஆண்டனியோடு இணைந்து பணியாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு கடின உழைப்பும், முழு அர்ப்பணிப்பும் தேவை. அந்த குணங்களோடு சைத்தான் திரைப்படத்தில் களம் இறங்கி, தன்னுடைய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார், கேரளாவில் இருந்து உதயமாகி இருக்கும் கதாநாயகி அருந்ததி நாயர்.  விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து, சைக்கோலாஜிக்கல்  - திரில்லர் பாணியில்  அறிமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருக்கும் சைத்தான் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.
என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிக பெரிய மைல் கல்லாக அமைந்திருக்கும் இந்த ‘சைத்தான்’ எனக்கு தேவதை என்று மெல்லிய புன்னகையோடு துவங்குகிறார் அருந்ததி நாயர்.
‘என் மீது நம்பிக்கை வைத்து, என்னை சைத்தான் படத்திற்காக தேர்ந்தெடுத்த விஜய் ஆண்டனிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். ’ஐஸ்வர்யா’ என்னும் வலுவான  கதாபாத்திரம் மூலம் என்னுடைய திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை பெற்று தந்திருக்கிறது சைத்தான் என்பதை நான் பெருமையாக சொல்லுவேன்.
பொதுவாகவே வளர்ந்து வரும் பிற மொழி பேசும் கதாநாயகிகளுக்கு, அவர்களின் சொந்த குரலில் டப்பிங் செய்வதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.ஆனால் விஜய் ஆண்டனி என்னுடைய சொந்த குரலிலேயே சைத்தான் படத்தில் பேச செய்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.
சைத்தான் பார்ப்பதற்கு
சாதுவாகவும்,எளிமையாகவும் இருக்கலாம், ஆனால்  வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அந்த  ’சைத்தான்’ னின் உண்மையான அவதாரத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள் என்று மிரட்டும் தோரணையில் கூறுகிறார் அருந்ததி நாயர்.
 
  வளரும் படங்கள்

மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக  ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும்   படம் சவுகார்பேட்டை. ஸ்ரீகாந்த் - ராய்லட்சுமி இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படம் மூன்று மொழிகளில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது.

தமிழில் சவுகார்பேட்டை , தெலுங்கில் ‘பேகம் பேட்டா’, ஹிந்தியில் ‘தந்திர சக்தி’ என்ற பெயரில் தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது.
 சுமன். கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, சரவணன்,மனோபாலா,  விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், தலைவாசல் விஜய், சம்பத், கோவைசரளா,  பவர்ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, நான் கடவுள் ராஜேந்திரன், டி.பி.கஜேந்திரன், ரேகா, ஆர்த்தி  ஆகியோர் நடிக்கிறார்கள்.


இப்படத்திற்கான இசை ஜான்பீட்டர், ஒளிப்பதிவு  சீனிவாசரெட்டி, பாடல்கள் நா.முத்துக்குமார், விவேகா
தயாரிப்பு   -  ஜான்மேக்ஸ்  -   ஜோன்ஸ்  கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வடிவுடையான்.  படத்தை பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்... இதுவரை பார்த்த ஸ்ரீகாந்த் - ராய் லட்சுமி இருவரையும் இப்படம் வேறுபடுத்தி காட்டும் படமாக இருக்கும்..பேய் கதைதான் ஆனால் வேறு மாதிரியான உணர்வை இது தரும் என்றார் வடிவுடையான்.

செப்டம்பர் மாதம் மூன்று மொழிகளிலும் வெளிவர உள்ளது சவுகார்பேட்டை

 
  திரை வரலாறு

பெண்களை வெறும் போதைப் பொருளாக நினைப்பவர்களை எதிர்த்து குரல் கொடுப்பவர் நாயகி சாந்தினி. ஓர் இளம்பெண்ணுக்கு டார்ச்சர் கொடுக்கும் ஒரு தொழில் அதிபருடன் மோதும் இவருக்கு பல சிக்கல்கள் வருகின்றன. தொழிலதிபர் பல்வேறு வழிகளில்
சாந்தினியை பழிவாங்கத் துடிக்கிறார்.


 
  சினிமா செய்திகள்

சென்னை, பிப்.2: வேதாளம் வெற்றி படத்திற்கு பிறகு நடிகர் அஜித் நடித்து வரும் புதிய படத்திற்கு ‘விவேகம்’ என பெயரிட்டுள்ளனர்.
வீரம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இந்த படத்தை இயக்குகிறார். அஜித்தின் 57-வது படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் 2 மாதமாக நடைபெற்று வந்தது.

 
  சாதனையாளர்கள்
சென்னை, மார்ச்21: நடிகர் கமல் ஹாசன்  இந்து மக்களின் நம்பிக்கைக்கு எதிராக பேசி வருவதாகவும், அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி வள்ளியூர் நீதிமன்றத்தில் வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.