வெனிசுலா அதிபர்ஹியூகோ சாவேஸ் குறும்வலைப் பதிவு சேவையான டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அமெரிக்க அதிபர் ஒபாமா, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு, ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூடு ஆகிய தலைவர்களின் வரிசையில் டிவிட்டரில் நுழைந்திருக்கும் தலைவர் என்பதை காட்டிலும் சாவேஸின் டிவிட்டர் பிரவேசம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.