.  
கறுப்பு கொடி ஊர்வலம்
Print
 
விழுப்புரம்,பிப்.12: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக திண்டிவனத்தில் கறுப்பு கொடி ஊர்வலம் நடைபெற்றது.
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து கறுப்பு கொடி ஊர்வலம்  திண்டிவனம்  ஜெயபுரம் ரவுண்டானா அருகே  தொடங்கி, நேரு வீதி வழியாக காந்தி சிலையை அடைந்தது.
 ஊர்வலத்திற்கு மதிமுக மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி தலைமை தாங்கினார். பா.ம.க. தலைமை  நிலைய செயலாளர் கருணாநிதி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் ரமேசுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி பிஜேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில்    இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கும் படி மத்திய அரசை வலியுறுத்தியும் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர்.  தொடர்ந்து நடைபெற்ற தெருமுனை கண்டன  கூட்டத்தில் அனைத்து கட்சி பிரமுகர்களும் பேசினார்கள்.