| . | |
தென்னாப்பிரிக்கா நம்பர்-1 |
|
துபாய், பிப்.11: ஒருநாள் போட்டிகள் தரவரிசை பட்டியலில் தென்னாப்பிரிக்கா முதல் இடத்தை உறுதி செய்து கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் வெற்றி பெற்றதை அடுத்து தென்னாப்பிரிக்கா உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவிடமிருந்து முதல் இடத்தை தட்டிப் பறித்தது. இதனிடையே இலங்கைக்கு எதிரான தொடர் வெற்றி மூலம் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறியது. |
|
எனினும் கடைசி போட்டியில் தோல்வி அடைந்ததன் விளைவாக இந்தியா மீண்டும் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனிடையே ஆஸ்திரேலியா நியூசிலாந்து இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 4வது போட்டி நேற்று அடிலெய்டில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர் சமன் ஆனது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதன் விளைவாக தர வரிசையில் தென்னாப்பிரிக்காவின் முதலிடம் உறுதியாகி உள்ளது. இந்த ஆண்டுக்கான தரவரிசையை முடிவு செய்யும் அவகாசம் ஏப்ரல் மாதம் வரை உள்ளது. ஆனால் ஏப்ரல் மாதம் வரை வேறு எந்த அணியாலும் தென்னாப்பிரிக்கா அளவுக்கு புள்ளிகளை பெற முடியாது. நியூசிலாந்துக்கு மட்டுமே அந்த வாய்ப்பு இருந்தது. நியூசிலாந்து நேற்று தோல்வி அடைந்ததால் தென்னாப்பிரிக்காவின் முதலிடம் உறுதியாகி உள்ளது. முதலிடத்தை பிடித்துள்ள தென்னாப்பிரிக்காவுக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்பட உள்ளது. |
|