| . | |
காம்பீர், ரெய்னா ஜோடியால் வெற்றி |
|
கொழும்பு, ஜன. 29: கவுதம் காம்பீர் மற்றும் சுரேஷ் ரெய்னா ஜோடியின் அபார ஆட்டம் காரணமாக இந்தியா முதல் ஒருநாள் போட்டியை வெல்ல முடிந்ததாக கேப்டன் மகேந்திர சிங் டோனி கூறியுள்ளார். |
|
இந்தியா இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி தம்போலாவில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை, இந்தியாவிக்கு 247 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் ஆடத் துவங்கிய இந்தியா 4 விக்கெட் இழப்பில் வெற்றி இலக்கை எட்டியது. கேப்டன் டோனி, ஆட்டம் இழக்காமல் 61 ரன்களை குவித்தார். கவுதம் காம்பீர் 62 ரன்களையும், சுரேஷ் ரெய்னா 54 ரன்களையும் குவித்தனர். ரெய்னா காம்பீர் ஜோடி 113 ரன்களை சேர்த்தது. இலங்கை வீரர் ஜெயசூர்யா சதம் அடித்தார். அவர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் டோனி, கவுதம் காம்பீர் மற்றும் சுரேஷ் ரெய்னா ஜோடியின் அபார ஆட்டம் வெற்றிக்கு வழி வகுத்ததாக கூறினார். இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக ஆடியதாக கூறிய அவர், இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார். இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே ஆடுகளம் ரன் குவிக்க ஏற்றதாக இல்லாததால் இலங்கை அணி தடுமாறியதாக தெரிவித்தார். இனிவரும் போட்டிகளில் இலங்கை அணி இந்தியாவுக்கு பதிலடி தரும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த தொடரில் 2வது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறுகிறது. |
|