.  
பான்டாவுக்கு பிறந்தநாள்
Print
 
நியூயார்க், ஜன. 22: அமெரிக்காவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் பான்டா கரடி கேக் வெட்டி தனது பிறந்தநாளை  கோலாகலமாக கொண்டாடியிருக்கிறது.
அமெரிக்க விலங்கியல் பூங்காக்களில்  அரியரக விலங்குகளின் பிறந்தநாளை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் சீனாவில் இருந்து  கொண்டுவரப்பட்ட பான்டா கரடியின் பிறந்தநாளை சாண்டி யாகோ விலங்கியல் பூங்காவில் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

சீனாவில் உள்ள பான்டா கரடி சரணாலயத்தில் பிறந்த  இந்த கரடியின் உண்மையான பிறந்த தினம்   தெரியாது என்பதால் அமெரிக்காவுக்கு இந்த கரடி கொண்டுவரப்பட்ட தினத்தை பிறந்தநாளாக வைத்து கொண்டு  இந்த விழாவை நடத்தியுள்ளனர்.  இந்த  பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பான்டா கரடி கேக் வெட்டி பார்வையாளர்களை மகிழ்வித்தது.