| . | |
அல்உம்மா தீவிரவாதி கைது |
|
சென்னை, ஜன. 20: பார்சல் வெடிகுண்டு வழக்கு தொடர்பாக கடந்த 3 வருடங்களாக தேடப்பட்டு வந்த அல்உம்மா தீவிரவாதி இன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். |
|
கடந்த 1995ம் ஆண்டு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பாளர் கிருஷ்ணன் என்பவரின் மனைவி தங்கம் பார்சல் வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அல்உம்மா இயக்கத்தைச் சேர்ந்த ராஜா உசேன், ஜாகீர் உசேன், அப்துல், சபி, ஆரூண் இஸ்மாயில் உள்ளிட்ட 8 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான அபுபக்கர் சித்திக் என்பவர் தலைமறைவாகிவிட்டான். இந்தநிலையில் 2005ம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்த ஆரூண் இஸ்மாயில், துபாய்க்கு தப்பி சென்றான். அவனை பிடிக்க சிபிசிஐடி கூடுதல் டிஜிபி நரேந்திர பால்சிங், ஐ.ஜி. அசுதோஷ், எஸ்.பி.செந்தில் குமாரி ஆகியோர் தலைமையில் சிறப்பு புலனாய்வு பிரிவு ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் துபாயில் இருந்து பாங்காங் வழியாக சென்னைக்கு ஆரூண் இஸ்மாயில் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாறுவேடத்தில் போலீசார் மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்று காலை தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்த ஆரூண் இஸ்மாயிலை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். |
|