.
 
 
 
 
 
 

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்

.

Thursday, 18 May, 2017   04:14 PM
.
புதுடெல்லி, மே 18: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லியை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
.

இந் நிலையில் தினகரன் ஜாமின் மனு மீது இன்று மாலை விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் முதலில் சுகேஷ் சந்திர சேகரை கைது செய்தனர்.


இவரை பிடித்து விசாரணை செய்ததில்அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளராகிய  டி.டி.வி தினகரனிடம் டெல்லி போலீஸ் விசாரணை மேற் கொண்டனர். மேலும் போலீசார் தினகரனை திகார் சிறையில் விசாரணைக்கைதியாக வைத்துள்ளனர். நீதிமன்ற அனுமதியுடன்  அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரகாஷ் 3 வது ஆளாக கைது செய்யப்பட்டார்.


தற்போது விசாரணையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களை அடுத்து பாபு என்பவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இந் நிலையில் கடந்த 20 நாட்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினகரன் போலீசாருக்கு முழு அளவில் ஒதுத்ழைப்பு கொடுத்து வருவதால் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரி மனு அளித்துள்ளார்.


இந்த மனு மீது இன்றுமாலை விசாரணை நடைபெறுகிறது.  

| |

?????? :