.
 
 
 
 
 
 

தேசிய டெங்கு விழிப்புணர்வு கூட்டம்

.

Thursday, 18 May, 2017   04:10 PM
.
சென்னை, மே 18: சென்னையில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தேசிய டெங்கு விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்பட்டது
 
.

இதன் ஒரு பகுதியாக சென்னையில் அமைச்சர்  சி. விஜயபாஸ்கர் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்ட தேசிய டெங்கு விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சிகள்  தமிழகத்தின் அனைத்து மாவட்டங் களிலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில்  உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்டது.


இந்த கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கவும், ஏடிஸ்கொசுக்கள் உற்பத்தியினை தடுக்கவும் “ஏற்கனவே  தொடர்புடைய துறைகள் மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்த விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.


சென்ற ஆண்டை போலவே  இந்த ஆண்டும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு டெங்கு காய்ச்சல் முழுமையாக  கட்டுப்படுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டன.


 மேலும் இந்த கூட்டத்தில் இந்த ஆண்டு புதியதாக  தயாரிக்கப்பட்ட  டெங்கு விழிப்புணர்வு  குறித்த சுத்தம் சுகம் தரும்  என்ற குறும்படத்தின்  குறுந்தகட்டினை அமைச்சர்  வெளியிட்டார்.


 இந்த தேசிய டெங்கு விழிப்புணர்வு நாள் கூட்டத்தினையொட்டி  ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் மற்றும் அவற்றை தடுப்பது குறித்தும் விரிவாக விளக்கும் வகையில் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 இந்த கூட்டத்தில் குடும்பநலத்துறை முதன்மை செயலாளர் மரு. ஜெ. இராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

| |

?????? :