.
 
 
 
 
 
 

ஸ்டாலின்குற்றச்சாட்டு

.

Thursday, 18 May, 2017   04:07 PM
.
திருச்சி, மே 18:  தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு கோவில் குளங்களை தூர் வாரவேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவரும், மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.திருச்சியில் கோவில் குளம் தூர்வாரும் பணியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
.

. மேலும், இந்த பணியை ஆட்சியாளர்கள் தடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.


இதுகுறித்துஸ்டாலின் விடுது“துள்ள அறிக்கையில்,  திருச்சி புத்தூர் பெரியநாச்சியம்மன் கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியை பார்வையிடுவதற்காக மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


பின்னர் புத்தூர் பெரிய நாச்சியம்மன் கோவிலுக்கு சென்ற அவர், அங்கு தெப்பக்குளம் தூர்வாரும் பணியை பார்வையிட்டு சிறிது நேரம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்.


இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், திருச்சி புத்தூர் பெரிய நாச்சியம்மன் கோவில் தெப்பக்குளம் தூர்வாரப்பட்டு 77 ஆண்டுகள் ஆகிறது.அதன்பிறகு தூர்வாரப் படவில்லை.


தற்போது தி.மு.கவினர், தன்னார்வ அமைப்பினர் தூர்வாரி வருகின்றனர். இன்னும் 5 நாட்களில் இப்பணி முடிந்து விடும்.
தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி காப்பாற்ற அரசு முன்வர வில்லை. ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினரும் சேர்ந்து தூர்வாரும் பணியை தடுக்கின்றனர்.

ஆனால் அனைத்து தடைகளையும் தாண்டி தூர்வாரும் பணி திறம்பட நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

| |

?????? :