.
 
 
 
 
 
 

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

.

Thursday, 18 May, 2017   04:04 PM
.
சென்னை, மே 18: சென்னை எஸ்பிளனேடு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் நேற்று மதியம்  02.00 மணியளவில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது,  அரண்மனைக்காரன் தெரு, மெக்லின் தெரு சந்திப்பு பிளாட்பாரம் அருகில் மூன்று  நபர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை துண்டு காகிதத்தில் எழுதி விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
.
அதன்பேரில் சசி, மூர்த்தி, முரளி, ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து  பணம்  ரூ.32,900, 4 செல்போன்கள் மற்றும்  3 நோட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
| |

?????? :