.
 
 
 
 
 
 

கைலாசநாதர் கோயிலில் யாகம்

.

Thursday, 18 May, 2017   04:01 PM
.
விழுப்புரம், மே 18:  மழை வேண்டி, விழுப்புரம் கைலாசநாதர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு யாகம் நேற்று நடைபெற்றது.
.

விழுப்புரம் கைலாசநாதர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில்  நடைபெற்ற  இந்த யாகத்தை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, சிவ பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  


இதைத் தொடர்ந்து காலை 7 மணி அளவில் தொடங்கி பகல் 10 மணி வரை மழை வேண்டியும், வறட்சி நீங்கவும் வருண ஜப யாகம் நடத்தப்பட்டது.  இதில், பக்தர்கள் மற்றும் அதிமுக வினர் பலர் பங்கேற்றனர்.

| |

?????? :