.
 
 
 
 
 
 

பஸ் மீது பீர் பாட்டிலை வீசியவர்க்கு

.

Thursday, 18 May, 2017   03:57 PM
.
 காஞ்சிபுரம், மே 18: காஞ்சிபுரம் அருகே பேருந்து மீது பீர் பாட்டில்களை வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
.

காஞ்சிபுரம் அடுத்த பாலூர் பகுதியில் இயங்கி வருகிறது மதர்சன் இந்தியா லிமிடெட். இங்கு ஆரணி பகுதியிலிருந்து சுமார் 60-க்கும் மேற்பட்டோர் வந்து பணிபுரிந்து வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று 2-வது ஷிப்டு முடித்து நள்ளிரவு 12 மணிக்கு காஞ்சிபுரம் வழியாக வீடு திரும்பிக்கொண்டிருக்கையில், பேருந்தினை பெருநகர் பகுதியை சேர்ந்த வினோத் ஓட்டிவந்தார்.


அப்போது பெரியார் நகர் - ஓரிக்கை சாலையில் பேருந்திற்கு எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் பேருந்தினை நோக்கி பீர் பாட்டிலை வீசியுள்ளனர். இதில் நிலைகுலைந்த பேருந்து ஓட்டுநர் காயமடைந்த நிலையிலும் பேருந்தினை
சாதூர்யமாக ஓட்டி சாலையோரமாக நிறுத்தியுள்ளார்.


இதனால் பேருந்தில் பயணம் செய்த 50 பெண்கள் உள்ளிட்ட 60 பேர் காயமின்றி உயிர் தப்பினர். உடனடியாக 108 மூலம் ஓட்டுநர் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டது. சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறை வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

| |

?????? :