.
 
 
 
 
 
 

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

.

Thursday, 18 May, 2017   03:32 PM
.
சென்னை, மே 18: பூங்கா நகர் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த நபர் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
 சென்னை பூங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் தீபக்(வயது 32). இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். சென்ற வாரம் குடும்பத்துடன் கோடை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.


இந்நிலையில் நேற்று அவரது வீடு திறந்து இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் அளித்தனர். மேலும் இது குறித்து போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டை சோதனை செய்தனர்.அதில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும் தீபக் சென்னை வந்தால் தான் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு குறித்து தெரியவரும்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த யானைகவுனி போலீசார் அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

| |

?????? :