.
 
 
 
 
 
 

ரஜினி பதில்

.

Wednesday, 17 May, 2017   04:23 PM
.
சென்னை, மே 17:  அரசியலுக்கு வருவது குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது என்றும், அனைத்து ரசிகர்களையும் தொடர்ந்து சந்திக்க இருப்பதாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


.
8 ஆண்டு இடைவேளைக்குப்பிறகு ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல் நாளான கடந்த 15-ம் தேதி ரசிகர் மத்தியில் அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். முதல் நாளன்று கன்னியாகுமரி, கரூர், திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 750 ரசிகர்களை தனித்தனியாக சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். நேற்று 2-வது நாளாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி ஆகிய 3 மாவட்டத்தை சேர்ந்த 750 பேரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இன்று தொடர்ந்து 3-வது நாளாக இந்த நிகழ்வு நடைபெற்றது. முதல்நாளில் கருப்பு ஜிப்பாவும், 2-வது நாளில் வெள்ளை ஜிப்பாவும் அணிந்து இருந்தார். இன்று வெண் பட்டு நிறத்தில் குர்தா அணிந்து இருந்தார். இன்றைய தினம் விழுப்புரம், சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரஜினி கூறிய தாவது:- ரசிகர்களை சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து அனைத்து ரசிகர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். அரசியலுக்கு வருவது குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது என்று அவர் கூறினார்.
| |

?????? :