.
 
 
 
 
 
 

46 இடங்களில் சோதனை

.

Wednesday, 17 May, 2017   04:21 PM
.
சென்னை, மே 17: கோல்டு வின்னர் உள்பட பல்வேறு சமையல் எண்ணெய்களை தயாரிக்கும் காளீஸ்வரி குழும நிறுவனத்திற்கு சொந்தமான 46 இடங்களில் ஒரே நேரத்தில் 500 வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

.
காளீஸ்வரி நிறுவனம் பல ஆண்டுகளாக முறையான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமலும், வருமான வரி செலுத்துவதில் முறைகேடு செய்து இருப்பதையொட்டி வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலையில் ராயப்பேட்டையில் உள்ள காளீஸ்வரி நிறுவனத்தின் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.காலை 7 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது. அதிகாரிகள் உள்ளே சென்று கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டனர். உள்ளே செல்லவோ, வேறு யாரையும் அனுமதிக்கவோ மறுத்து விட்டனர். சென்னையில் 38 இடங்கள் உள்ளிட்ட தமிழகத்தில் 46 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. ரெய்டு நடக்கும் இடங்களில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
| |

?????? :