.




 
 
 
 
 
 

நெப்போலியனுக்குப் பின்னர் இளம் தலைவ

.

Monday, 08 May, 2017   04:19 PM
.
பாரிஸ், மே 8 : இரண்டு கட்டங்களாக நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 39 வயதே ஆன இமானுவேல் மக்ரான் 65
சதவிகித ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் பிரான்ஸ் வரலாற்றில் நெப்போலியனுக்குப் பின்னர் இளம் வயதில் ஆட்சி பீடம் ஏறியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
.

பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி அந்நாட்டில் தேர்தல் நடந்தது.

 

இந்த தேர்தலில் கன்சர்வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான், மற்கீம் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளது.


இதில் மக்ரான் 65 சதவிகித வாக்குகளுடன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மெரீனை வீழ்த்தினார். இது இதுவரை இல்லாத சரித்திர சாதனையாகும். மேலும், 39வயதே ஆன இமானுவேல் மக்ரான் தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம் அந்நாட்டு வரலாற்றில் நெப்போலியனுக்குப் பின்னர் மிக இளம் வயதில் ஆட்சி பீடம் ஏறும் நபர் என்ற புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மக்ரானுக்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

| |

?????? :