.
 
 
 
 
 
 

பேருந்து கவிழ்ந்து 44 பேர் பலி

.

Wednesday, 19 April, 2017   04:28 PM
.

சிம்லா, ஏப்.19: இமாச்சல பிரதேச மாநிலத்தில் பேருந்து ஒன்று கவிழ்ந்து ஆற்றில் விழுந்ததில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

 

.


இமாச்சல பிரதேசம், சிம்லா மாவட்டத்திலிருந்து  உத்தரகாண்ட் மாநிலம், தியோனி பகுதிக்கு சென்ற தனியார் பேருந்து ஒன்று இன்று காலை டான்ஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த பேருந்தில் பயணம் செய்த 44 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.


இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நெர்வாரா போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பேருந்தில் மொத்தம் 56 பேர் பயணம் செய்த நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

| |

?????? :