.
 
 
 
 
 
 

மீனவர்களுக்கு நிதியுதவி

.

Wednesday, 19 April, 2017   04:26 PM
.

சென்னை, ஏப்.19: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு மீட்க இயலாத வகையில் கடலில் மூழ்கிய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 படகுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவியினை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


.

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு ஆளாகி, மீட்க இயலா வண்ணம் கடலில் மூழ்கிய இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 படகுகளை இழந்த  18 மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப் பட்டமையால், அம்மீனவர்களின் துயரத்தினை போக்கிடும் வகையில், அவர்களுக்கு  நிவாரண உதவித் தொகையாக தலா ரூ.5 இலட்சம் வீதம்  மொத்தம் ரூ.90 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  இன்று  தலைமைச் செயலகத்தில் அதற்கான காசோலைகளை 18 மீனவ பயனாளிகளுக்கு     முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி நேரில் வழங்கினார்.


  முதலமைச்சரிடமிருந்து நிவாரண உதவித் தொகைக்கான காசோலைகளை பெற்றுக் கொண்ட மீனவக் குடும்பத்தினர், தங்களது   நன்றியினை   முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில்,   மீன் வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர்  டி.ஜெயகுமார்,  தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன்,

நாடாளுமன்ற உறுப்பினர்   அன்வர்ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன்,  கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி,   மீன்வளத் துறை ஆணையர்   பீலா ராஜேஷ்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

| |

?????? :