.
 
 
 
 
 
 

லாரிகள் நேருக்கு நேர் மோதியதில்1 பலி

.

Wednesday, 19 April, 2017   04:24 PM
.

விழுப்புரம், ஏப்.19:  மரக்காணம் அருகே செங்கல் லாரியும், கழிவு நீர் எற்றி வந்த லாரியும் நேர்க்கு நேர் மோதி கொண்டதில் ஒருவர் மரணம் அடைந்தார். மேலும்  5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நரையூர் கிராமத்தில்  இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அதேபோல் காஞ்சிபுரத்தில் இருந்து கழிவுநீர் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மரக்காணம் நோக்கி சென்று கொண்டு இருந்தது.


புதுச்சேரி, சென்னை ஈசிஆர்  சாலையில் மரக்காணத்தை அடுத்து தேன்பாக்கம் கால்வாய் அருகே வந்த போது இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் செங்கல் லாரியில் பயணம் செய்த சௌந்தர்  (வயது 35) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 5  பேர் படுகாயம் அடைந்த செய்யூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


லாரிகள் மோதிக்கொண்டதில் நிலைதடுமாறி கால்வாய் பாலத்தில் தொங்கி கொண்டு இருந்தது. லாரியின் ஒரு பகுதி உடைந்து கால்வாயிக்குள் விழுந்தது. இந்த விபத்தால் ஈசிஆர்  சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் காஞ்சிபுரம் வழியாகவும், காஞ்சிபுரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் மரக்காணம் வழியாகவும் திருப்பி விடப்பட்டன.
இந்த விபத்து குறித்து சூணாம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

| |

?????? :