.
 
 
 
 
 
 

கள்ளநோட்டு வைத்திருந்தவர் கைது

.

Wednesday, 19 April, 2017   04:23 PM
.

சென்னை, ஏப்.19: மயிலாப்பூரில் உள்ள தனியார் வங்கியில் 13 போலி ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை டெபாசிட் செய்ய வந்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஒருவரை தேடி வருகின்றனர்.


.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் வங்கியில் நேற்று ஒருவர் ரூ.32 ஆயிரம் டெபாசிட் செய்ய வந்துள்ளார். அவர் கொடுத்த ரூபாய் நோட்டுகளை வங்கி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.  அப்போது அவர் கொடுத்ததில் 13 ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.


அந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்தார்த் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆல்வின் கிரிஸ்டோபர்(வயது 40) என்பது தெரியவந்துள்ளது.  மேலும் அவர் ஒரு கார்மென்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதன் தலைமை அலுவலகம் டெல்லி யில் உள்ளது. ஆல்வின் அந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கும் பணியில் உள்ளார்.

அவரிடம் பெரியமேட்டை சேர்ந்த வாடிக்கயாளர் பிரசாத் என்பவர் தனது கார் டிரைவர் மூலம் ஆல்வினிடம் ரூ.32 ஆயிரம் கொடுத்துள்ளார். அந்த பணத்தில் கள்ளநோட்டுகள் இருந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆல்வினை கைது செய்து பிரசாத்தை தேடி வருகின்றனர்.

| |

?????? :