.
 
 
 
 
 
 

முதலமைச்சர் இரங்கல்

.

Wednesday, 19 April, 2017   04:21 PM
.

சென்னை, ஏப்.19: அதிமுக எம்எல்ஏ பி.வி.பாரதியின் மனைவி மரணம் அடைந்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.


.

சீர்காழி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.வி.பாரதியின் மனைவி மாலதி உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில் கூறியிருப்பது:-  தங்களின் அன்பு மனைவி மாலதி நேற்று  உடல் நலக் குறைவால் காலமானார்  என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.


இந்தத் துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்றும், மாலதி ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும்  எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மாலதியை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

| |

?????? :