.
 
 
 
 
 
 

தேடப்படும் குற்றவாளி தினகரன்

.

Wednesday, 19 April, 2017   03:43 PM
.
புதுடெல்லி/சென்னை, ஏப்.19 :தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
.
அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ரூ.50 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது தொடர்பாக டெல்லியில் நேற்று முன்தினம் இடைத் தரகர் சுகாஷ் என்ற சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 2 கார்களும் கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையே டெல்லி போலீசாருக்கு நேற்று ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதில், ‘டி.டி.வி.தினகரன் வெளிநாட்டு குடியுரிமை பெற்று இருப்பவர். எனவே அவர் வெளிநாட்டுக்கு சென்று விட கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதையடுத்து டெல்லி போலீசார் கோர்ட்டில் சிறப்பு அனுமதி பெற்று டி.டி. வி.தினகரனை  தேடப்படும் நபராக அறிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பை போலீசார் நேற்று வெளியிட்டனர்.

இதற்கிடையே இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறை முகங்களுக்கு டெல்லி குற்றப் பிரிவு போலீசார் டி.டி.வி. தினகரன் பற்றிய தகவல்களை அனுப்பி  உள்ளனர். விமானம் மற்றும் கப்பல் மூலம் அவர் வெளிநாட்டுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக  உஷார்படுத்தப்பட்டுள்ளது.இதனால் தினகரன் மீதான டெல்லி குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கைகள் இறுகி வருகிறது. டெல்லி போலீசார் சென்னை வந்து விசாரிக்கும் போது  தினகரன் கைது செய் யப்படுவார் என்று கூறப்படுகிறது.
| |

?????? :