.
 
 
 
 
 
 

விழுப்புரத்தில் 109 டிகிரி வெயில்

.

Wednesday, 19 April, 2017   03:41 PM
.
சென்னை, ஏப்.19:தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது.தமிழகத்தில் நேற்று வெப்பக்காற்று வீசிய நிலையில் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில் மேலும் 2 நாட்களுக்க அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
.
தமிழகத்தை பொறுத்தவரை விழுப்புரம் மாவட்டத்தில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது. அடுத்ததாக திருவண்ணாமலையில் 108 டிகிரி, திருநெல்வேலியில் 105 டிகிரி, வேலூரில் 106 டிகிரி, மதுரையில் 102 டிகிரி, திருச்சியில் 102 டிகிரி, மதுரையில் 100 டிகிரி வெப்பமும் பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வெப்பத்தின் அளவு 99 டிகிரியாக பதிவாகி உள்ளது. இருப்பினும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பெருமளவில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்துள்ளளனர்.
| |

?????? :